• சாமை தோசை
  • Maize Dosa

தேவையான பொருள்கள்

சாமை மாவு - ஒரு டம்ளர்
தக்காளி
பச்சை மிளகாய்
மிளகு, சீரக பொடி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

ஒரு டம்ளர் சாமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். மிளகு, சீரகபொடி கலந்து நீர் விட்டு கரைக்கவும்.தோசை மாவு பதம் வருமளவில் தண்ணீர் சேர்க்கவும். தோசை கல்லை சூடாக்கி வார்க்கவும். ஒரே சீராக ஊற்ற வேண்டும். கரண்டியால் தேய்க்கக் கூடாது.
வழக்கமாக தோசைக்கு தொட்டுக் கொள்ளும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி துவையல், தோசை மிளகாய் பொடி இவற்றில் ஏதாவது ஒன்றை தொட்டு சாப்பிடலாம்.