• முடக்கத்தான் கீரை தோசை
  • Indravalli Dosa
முடக்கத்தான் கீரை முடக்கு (மூட்டு வலி) உள்ளிட்ட பலவித உடல் வலிகளை போக்கும்.

தேவையான பொருள்கள்

முடக்கத்தான் கீரை - 2 கப் (ஆய்ந்து சுத்தம் செய்தது)
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்து - ¼ கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும், மூழ்கும் அளவு தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் grinderல் போட்டு நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு கரண்டி மாவை எடுத்து, சுத்தம் செய்து ஆய்ந்த முடக்கத்தான் கீரையும் சேர்த்து, ஒரு மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். அரைத்த மாவை, மீதமுள்ள தோசை மாவோடு நன்கு கலந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம். முடக்கத்தான் கீரை தோசை ரெடி.