• வாழைப்பூ அடை
  • Plantain Flower Dosa

தேவையான பொருள்கள்

வாழைப்பூ (நாரை எடுத்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கியது ) - 2 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சை அரிசி - ஒரு பிடி
து வரம் பருப்பு - ½ கப்
உளுத்தம் பருப்பு - ¼ கப்
கடலை பருப்பு - ஒரு பிடி
பாசி பருப்பு - ¼ கப்
நல்லெண்ணெய் ( அடை வார்க்க )
பெருங்காயம் - சிறிது
வர மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசி & பருப்பு வகைகளை ஒன்றாகவும், வற்றல் மிளகாய், கட்டி பெருங்காயத்தை தனித் தனியாகவும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். மூன்று மணி நேரம் கழித்து, கைப்பிடி அளவு ஊறிய அரிசி எடுத்து, வற்றல் மிளகாயோடு சேர்த்து நன்கு அரைக்கவும்.
மிளகாய் நன்கு மசிந்ததும், அரிசி, பருப்பு கலவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு (மாவு கெட்டியாக) கொர கொரப்பாக அரைக்கவும். கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் அடை மாவை ஊற்றவும். மூடி வைத்து நன்கு வேக வைக்கவும் திருப்பி போட்டு, சிறிது எண்ணெய் விட்டு, வேக வைக்கவும்.