• வேப்பம்பூ ரசம்
  • Neem Rasam

தேவையான பொருள்கள்

புளி - எலுமிச்சம் பழம் அளவு
மிளகு - ½ டீ ஸ்பூன்
சீரகம் - ½ டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
பெருங்காயம் - ½ டீ ஸ்பூன்
எண்ணைய் - 1 டீ ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 3 எண்ணம்
வெந்தயப் பொடி - ½ டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 2 பிசைந்து கரைத்தது
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வேப்பம்பூ - 1 ஸ்பூன் வறுத்தது

செய்முறை :

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை மிளகு, சீரகம் அரைத்தது தாளித்து அதில் வெந்தயப்பொடி, பெருங்காயம் போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும். அதனுடன், உப்பு, கரைத்த தக்காளி இவற்றை போட்டு நுரை ததும்பி வறும் போது அடுப்பை நிறுத்தவும்.
நிறுத்தும் முன் கொத்தமல்லி, வேப்பம் பூவை இலேசாக வறுத்து இதனுடன் சேர்த்து இறக்கவும். சுவையான மருத்துவ குணம் நிறைந்த வேப்பம்பூ ரசம் தயார்.