• தூதுவளை ரசம்
  • Solanum Trilobatum Rasam

தேவையான பொருள்கள்

தூதுவளை இலை - 2 பிடி (ஆய்ந்து சுத்தம் செய்தது)
ரசப் பொடி-1 ஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
மிளகு சீரக தூள் - ½ ஸ்பூன்
தக்காளி -1
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

தூதுவளை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். துவரம்பருப்பை நன்கு வேகவைத்து சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். ஆய்ந்த தூதுவளை கீரையை அரை டம்ப்ளர் நீர் விட்டு, மிக்சியில் போட்டு, நன்கு அரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். புளியை நன்கு கரைத்து புளி ஜலத்தை அடுப்பில் வைத்து, உப்பு, மஞ்சள் பொடி, ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். தக்காளியை வெட்டிப் போடவும்.
பொடிவாசனை போகும் வரை கொதித்தபின் பருப்பு ஜலத்தை சேர்க்கவும். அதனுடன் வடிகட்டி வைத்திருக்கும் தூதுவளை சாறையும் சேர்க்கவும். இதனுடன் மிளகு, சீரக பொடியையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விடவும். நுரைத்து வரும்பொழுது, அடுப்பை அணைத்து விடவும். கொதித்தால் கசந்து போய்விடும். ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும். தூதுவளை ரசம் ரெடி. நெஞ்சு சளியை நீக்கக் கூடியது தூதுவளை.