• வெந்தய தோசை
  • Fenugreek Dosa

தேவையான பொருள்கள்

புழுங்கலரிசி - 3 கப்
வெந்தயம் - 2 ½ டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு எண்ணெய் = ( தோசை வார்க்க )
செய்முறை :

அரிசி, வெந்தயம் இவற்றை தனித் தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவும். முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை சேர்த்து உளுந்து அரைப்பது போல் நன்கு பொங்க அரைத்து அதிலேயே அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க வைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும். தோசையை ஊற்றி மூடிபோட்டு வேகவைத்து எடுக்கவும். மறுபக்கம் திருப்பி போட சரியாக வராது.